தமிழ்நாடு

பண்ருட்டி அருகே இருசக்கர வாகனம்-அரசுப் பேருந்து மோதல்: இரு இளைஞர்கள் பலி

பண்ருட்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர்கள் 2 பேர் பலியாகினர். 

DIN

பண்ருட்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர்கள் 2 பேர் பலியாகினர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், செம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவா மகன் சுகுமார்(22), ஐயப்பன் மகன் சரண்ராஜ்(21). இவர்கள் இருவரும் திருநெல்வேலியில் உள்ள தனியார் சூரிய ஒளி மின் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனராம்.

இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பண்ருட்டி நோக்கிச் சென்றனர். 

திங்கள்கிழமை அதிகாலை 12.45 மணி அளவில் சேமக்கோட்டை ஐய்யனார் கோயில் அருகே வந்தபோது எதிரே  கும்பகோணத்தில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில்  பைக்கில் சென்ற இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற புதுப்பேட்டை போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியட்நாம் பாரம்பரியம்... ரவீனா ரவி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது! உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

SCROLL FOR NEXT