தமிழ்நாடு

ஏற்காடு மலைப்பாதையில் விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 16 பேர்!!

ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்தில், அதிர்ஷ்டவசமாக 16 பேர் உயிர்தப்பினர்.

DIN

ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்தில், அதிர்ஷ்டவசமாக 16 பேர் உயிர்தப்பினர்.

ஏற்காட்டை சுற்றிபார்ப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தங்கள் குழந்தைகளுடன் வேனில் வந்து, ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு,  நேற்று  மாலை வேனில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 

ஏற்காடு  மலைப்பாதையில் வேன் இறங்கி  கொண்டிருந்த போது, திடீரென ஆறாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கட்டுப்பட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் 6 பேருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டது. மற்றவர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பினர். காயம் அடைந்த 6 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சைப்  பெற்று நேற்று மாலையே  திரும்பினர்.  

இந்த விபத்து குறித்து ஏற்காடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்நிலையில்  வேனில் வந்த குழந்தை ஒன்று திடீரென கியர் ராடை இழுத்ததால், வேன் கட்டுப்பட்டினை இழந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT