சீமான் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

அரைமணி நேரம் நாட்டைக் கொடுங்கள்! ..மணிப்பூர் வன்முறையை நிறுத்துகிறேன்!

நாட்டை ஆளும் அதிகாரத்தை அரைமணிநேரம் கொடுத்தால், மணிப்பூர் வன்முறையை நிறுத்திக்காட்டுகிறேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

DIN


நாட்டை ஆளும் அதிகாரத்தை அரைமணிநேரம் கொடுத்தால், மணிப்பூர் வன்முறையை நிறுத்திக்காட்டுகிறேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், காஷ்மீரில் என்ன நடந்ததோ, அதற்கு முன்பு ஈழத்தில் என்ன நடந்ததோ அதுதான் தற்போது மணிப்பூரில் நடக்கிறது. 
 
தற்போது பழங்குடியின மக்கள் கிறிஸ்தவர்களாக உள்ளனர். மைத்தேயி மக்கள் உயர்ஜாதி இந்துக்களாக உள்ளனர். பழங்குடியினர் காடுகளில் உள்ளனர். மைத்தேயி மக்கள் பாஜக ஓட்டுகளாக கீழ்பகுதியில் உள்ளனர்.

மணிப்பூரில் பழங்குடி மக்களை வெளியேற்றி கனிம வளங்களை எடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதனால், மணிப்பூர் மக்களை அரசு மோதவிடுகிறது. லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றிவிட்டனர். நாட்டைக் கொடுங்கள் அரை மணிநேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துகிறேன். 

மணிப்பூரில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கலவரம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT