சிதம்பரம் சபாநாயகர் தெருவில் வீற்றுள்ள தக்ஷிண காளியம்மன் கோயிலில் இன்று காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் தெற்கு கோபுர வாயில் எதிரே உள்ள சபாநாயகர் தெருவில் பரமனது கட்டளையால் நகரை காக்கும் தேவதைகளும் பிரதானமாக விளங்குகிறார் தக்ஷிண காளியம்மன். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 29-ம் தேதி வியாழக்கிழமை கூஷ்மாண்ட ஹோமம், நடராஜர் அனுக்ஜை, மதுபர்க்கம், தனபூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
30-ம் தேதி மகா கணபதி ஹோமமும். ஜூலை 1-ம் தேதி நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, ஜூலை 2-ம் தேதி காலை தக்ஷிண காளியம்மனுக்கு ப்ரஸன்னாபிஷேகம், கலாகர்ஷணம், கடங்கள் யாகசாலை பிரவேசம், மாலை 1-ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹூதி, மகாதீபராதனை நடைபெற்றது.
ஜூலை 3-ம் தேதி காலை 2-ம் கால யாகபூஜையும், மாலை 3-ம் கால யாகபூஜையும், ஜூலை 4-ம் தேதி காலை 4-ம் கால யாகபூஜையும், மாலை 5-ம் கால யாகபூஜையும், ஜூலை 5-ம் தேதி காலை 6-ம் கால யாகபூஜையும், மாலை 7-ம் கால யாகபூஜையும், இரவு 8-ம் கால யாகபூஜை மற்றும் பூர்ணாஹூதி மகா தீபாராதனை நடைபெற்றது.
ஜூலை 6-ம் தேதி வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி கோ பூஜை, அஸ்ப பூஜை, கஜ பூஜை நடைபெற்ற பின்னர் யாத்ராதானம் நடைபெற்று கடம் புறப்பட்டு கோயில் விமானத்தை அடைந்து 10 மணிக்கு பொதுதீட்சிதர்கள் கலசத்திற்கு கும்ப நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
பின்னர் இரவு மகாபிஷேகமும், அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றது. ஜூலை 7-ம் தேதி முதல் தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி வி.எஸ்.ராஜசேகர தீட்சிதர் மற்றும் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.