சென்னையில் தோனி: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
தனது நிறுவனம் தயாரிக்கும் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக தோனி சென்னை வந்தடைந்தார்
தனது நிறுவனம் தயாரிக்கும் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக தோனி சென்னை வந்தடைந்தார்
சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்திருந்தனர் தோனியும் சாக்ஷியும்.
அதன்படி ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தினை தோனியின் நிறுவனம் தயாரிக்கிறது. ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, வினோதினி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்திற்கு விஷ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே, படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலரை தோனியும் தோனியின் மனைவி சாக்ஷியும் சேர்ந்து ஜூலை 10ஆம்தேதி அதாவது நாளை வெளியிட உள்ளனர். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தோனி இன்று சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு அங்கு கூடியிருந்த ரசிகர்கள் உற்காக வரவேற்பு அளித்தனர்.