தில்லி: சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகமும் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடல் வளத்தை பாதுகாக்கக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, பொதுநலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை எனக் தள்ளுபடி செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.