கட்டாலங்குளத்தில் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உள்ளிட்டோர். 
தமிழ்நாடு

கோவில்பட்டியில் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 313வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சித் துறை) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோட்டாட்சியர் (பொ) ஜெயா , கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி, திமுக ஒன்றிய செயலர் ராதா கிருஷ்ணன், கட்டாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சேசு பால்ராயா , கழுகுமலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், கயத்தாறு வட்டாட்சியர் நாகராஜன், கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தங்கையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர்களான வனஜா, ராஜராஜேஸ்வரி, ராணி, மீனாட்சி தேவி ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT