தமிழ்நாடு

ராணிப்பேட்டை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பதிவேடுகள் தீ வைத்து எரிப்பு!

ராணிப்பேட்டை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பதிவேடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

DIN

ராணிப்பேட்டை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பதிவேடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த குமணந்தாங்கல்  கிராம ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பள்ளியின் பூட்டை உடைத்து புத்தகங்கள் மற்றும் வருகைப் பதிவேடுகளை தீயிட்டுக் கொளுத்திய அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன்(30) என்பவரை சனிக்கிழமை  சிப்காட் போலீசார் கைது செய்தனர். 

மேலும், அரசுப் பள்ளியின் பதிவேடுகள், புத்தகங்களை தீயிட்டுக் கொளுத்தியது ஏன் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தொடக்கப் பள்ளி கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT