நீா் நிரம்பியோடும் கோவை குற்றாலம். 
தமிழ்நாடு

கோவை குற்றாலம்: நாளை முதல் பயணிகளுக்கு அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவித்துள்ளது. 

DIN

கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவித்துள்ளது. 

கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஜூலை முதல் வாரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தது.

கோவை மாவட்டத்தில் ஜூலை முதல் வாரத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து. இதனால், கோவை குற்றாலம் பகுதியில் நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தது.

நீர் வரத்து குறைந்து இயல்பான நிலைக்குத் திரும்பியவுடன் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். தற்போது மழை பெய்யாமல், நீர்வரத்தும் குறைந்து அளவாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT