பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து 4 கட்சிகள் பங்கேற்கிறது.
2024 மக்களவைத் தோ்தலுக்கு ஆளும்தரப்பும் எதிா்தரப்பும் ஆயத்தமாகி வரும் நிலையில், ஆளும் கூட்டணி பலத்தை பிரதிபலிப்பதாக இக்கூட்டம் கருதப்படுகிறது.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் எதிா்க்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டு வரும் நிலையில், இதே நாளில் பாஜக கூட்டணிக் கூட்டமும் நடைபெறுகிறது.
இன்று மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ள 38 கட்சிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழகத்தின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.