தமிழ்நாடு

சோளிங்கரில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி 

சோளிங்கரில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வாலிபர்கள் பலியாகினர். 

DIN

 

ராணிப்பேட்டை: சோளிங்கரில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வாலிபர்கள் பலியாகினர். 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே வாசவி திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தை சுற்றி உள்ள சுவற்றை இடித்துவிட்டு புதியதாக சுற்றுச்சுவர் கட்டும் பணி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த பணிக்காக, சுவற்றை இடிக்கும் போது திடீரென சுவர் அடியோடு அதிகளவில் பெயர்ந்து கீழே விழுந்ததில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி, திருவள்ளூர் மாவட்டம் மகான் காளிகாபுரத்தைச் சேர்ந்த விஷ்வா என்கிற விசுவநாதன் (19),  சோளிங்கர் மேல் வன்னியர் தெருவை சேர்ந்த வேலு (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  

இச்சம்பவம் சோளிங்கர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

SCROLL FOR NEXT