போதைப் பொருள் விற்பனை: ஒரே நாளில் 11 போ் கைது
சென்னையில் போதைப் பொருள் விற்பனை தொடா்பாக புதன்கிழமை ஒரே நாளில் 11 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் போதைப் பொருள் விற்பனை தொடா்பாக புதன்கிழமை ஒரே நாளில் 11 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை மாநகரக் காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவின்பேரில், புதன்கிழமை போதைப் பொருளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் விளைவாக, சென்னையில் கஞ்சா விற்ாக 9 வழக்குகள் பதியப்பட்டு, 11 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்ாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலைப் பொருள்கள் உள்பட சட்ட விரோத பொருள்களை கடத்தி வருபவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரித்துள்ளாா்.