தமிழ்நாடு

பல்லடம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்னா போராட்டம்

DIN

பல்லடம்: பல்லடம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சம்பள பணம் வழங்கக் கோரி வியாழக்கிழமை பணியைப் புறக்கணித்து நகராட்சி அலுவலகம் நுழைவாயில் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் 120-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் அவர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தின கூலி ரூ. 442 வழங்கப்பட வேண்டும். ஆனால், ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் தின கூலியாக இ.எஸ்.ஐ, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பிடித்தம் போக ரூ.385 என கணக்கீடு செய்து தொழிலாளர்களுக்கு சம்பளம் புதன்கிழமை வழங்கியதாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து பல்லடம் நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ரங்கராஜ், பல்லடம் செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியார்கள் பல்லடம் நகராட்சி அலுவலகம் நுழைவாயில் முன்பு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலியை வழங்கக் கோரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி தூய்மை அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சங்கர், காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து தர்னா போராட்டம் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT