முகப்பு
தமிழ்நாடு

தமிழக எல்லையை வந்தடைந்த காவிரி நீர்!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்த நிலையில் நீர் வரத்து விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:42 AM
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்த நிலையில், ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆர்ப்பரித்துக் கொடுத்தும் தண்ணீர்.
பகிர்:


பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்த நிலையில் நீர் வரத்து விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்துள்ளது.

கேரள மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இரு அணைகளில் இருந்தும் சுமார் 15,000 கன அடிக்கு மேல் உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

காவிரி ஆற்றில் நீர்வரத்தானது செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 1,000 கன அடியாக இருந்து வந்த நிலையில் கர்நாடக அணைகளின் நீர் திறப்பால் நீர்வரத்து மதிய 2 மணி நிலவரப்படி விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. மேலும் இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை பொறுத்தவாறு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →