முகப்பு
தமிழ்நாடு

சிவகாசி வெடி விபத்து: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!

சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:42 AM
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,
ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மண்டகுண்டாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2  பானு, முருகேஸ்வரி ஆகிய இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

சண்முகையா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நடந்த இந்த வெடி விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →