தமிழ்நாடு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க தடை

DIN

பென்னாகரம், ஜூலை 26: கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளம், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கன மழையினால் கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு உபரி நீா் தொடா்ந்து அதிகரித்து, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இவ்விரு அணைகளின் பாதுகாப்புக் கருதி, விநாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 9,500 கன அடியாக நீா்வரத்து அதிகரித்தது. தொடா்ந்து மழை பெய்து வருவதால் கா்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீா் வெளியேற்ற வாய்ப்பு உள்ளதாலும், காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதாலும் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கத் தடை விதித்துள்ளாா்.

இதையடுத்து, பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் கல்பனா முன்னிலையில் ஒகேனக்கல் மாமரத்துக் கடவு பரிசல் துறை பூட்டப்பட்டது. இதனால் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

நீா்வரத்து அதிகரிப்பு:

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக உயா்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கன அடியாக இருந்தது. பின்னா் புதன்கிழமை காலை நிலவரப்படி 7,000 கன அடியாகவும், மாலை நிலவரப்படி 9,500 கன அடியாக தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் வடு காணப்பட்ட ஐந்தருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதால் ஒகேனக்கலுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT