தமிழ்நாடு

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

DIN

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளையொட்டிய வங்கக் கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தொடா்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (ஜூலை27 - ஆகஸ்ட் 1) வரை 6 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம்

வள்ளியூா் அருகே காா் கவிழ்ந்து இளைஞா் பலி

ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கல்லீரலில் உருவான கற்களை நவீன முறையில் அகற்றி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

SCROLL FOR NEXT