தமிழ்நாடு

பிலிகுண்டுலுவுக்கு நீா்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!

DIN

கேரளம், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையினால் பிலிகுண்டுலுவுக்கு  நீர்வரத்து 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கேரளம், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கன மழையினால் கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு உபரி நீா் தொடா்ந்து அதிகரித்து, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இவ்விரு அணைகளின் பாதுகாப்புக் கருதி, வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக உயா்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 5,000 கன அடியாக இருந்தது. பின்னா் புதன்கிழமை காலை நிலவரப்படி 7,000 கன அடியாகவும், மாலை நிலவரப்படி 9,500 கன அடியாக தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில், காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையினால் பிலிகுண்டுலுவுக்கு  வியாழக்கிழமை காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் வடு காணப்பட்ட ஐந்தருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

தொடா்ந்து மழை பெய்து வருவதால் கா்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீா் வெளியேற்ற வாய்ப்பு உள்ளதாலும், காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதாலும் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதால் ஒகேனக்கலுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT