தமிழ்நாடு

நெல்லை: மின்சாரம் தாக்கி பலியான சிறுமியின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல்

DIN

நெல்லையில் மின்சாரம் தாக்கி பலியான சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி: வடக்கு புறவழிச்சாலை அம்பேத்கர் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் சத்யா (6 ). இவர் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் புதன்கிழமை அங்குள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மின் மோட்டார் பம்பில் உள்ள தண்ணீர் குழாயில் கை கழுவுகின்ற போது மின்சாரம் தாக்கி பலியானார். 

இந்த நிலையில் அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வியாழக்கிழமை மதியம் திருநெல்வேலி - மதுரை புறவழிச்சாலையில் அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் . 

இதையடுத்து காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த போராட்டம் காரணமாக சுமார் பத்து நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து அவருடைய உறவினர்கள் கூறுகையில் மின்சாரம் தாக்கி பலியான சிறுமியின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும்.  சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

விபத்துக்கு காரணமான மாநகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தான் உடலை வாங்குவோம் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: முதல்வர் ரேவந்த் ரெட்டி

இந்தியன் - 28!

சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும் ஈரானிய இயக்குநர்!

டி20 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

ஹரியாணாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கடிதம்

SCROLL FOR NEXT