தமிழ்நாடு

தமிழகத்தில் 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தி எடுக்குமாம்: வெளியே வராதீங்க..

DIN


தமிழகம், புதுச்சேரியில் மூன்று நாள்களுக்கு இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், 

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 

ஜூன் 2 முதல் ஜூன் 6 வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை

ஜூன் 2 முதல் ஜூன் 04 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்களுக்கு..

ஜூன் 2 முதல் ஜூன் 6 வரை மன்னார் வளைகுடா பகுதிகள், தென் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரிலிருந்து வெளியேறப்போவது யார்?

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்!

தேனிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

எனது வெற்றியின் ரகசியம் இதுதான்; மனம் திறந்த அபிஷேக் சர்மா!

செப்.17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடக்கம்!

SCROLL FOR NEXT