தமிழ்நாடு

சென்னையில் கலைஞர் பெயரில் பன்னாட்டு அரங்கம்!

DIN

சென்னை: சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் நாளை(ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ள இந்த நிகழ்வுக்கான இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இலச்சினை வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

1997ஆம் ஆண்டு டைடல் பூங்காவை ஏற்படுத்தி தொழில்நுட்பத்துறையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புரட்சியை ஏற்படுத்தினார். சென்னையில்  உலக தரத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ‘கலைஞர் கன்வென்ஷன் சென்டர்’ அமைக்கப்படும்.

பல நாடுகளில் இருப்பது போன்று சென்னையில் அமையவுள்ள இந்த உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கமானது கருணாநிதியின் பெயரை நூற்றாண்டு கடந்து எடுத்துச் செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT