மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. 
தமிழ்நாடு

மதுரையில் தினமணி நாளிதழ் சார்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி!

தினமணி சார்பில் நடத்தப்பட்ட தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

DIN


மதுரை: தினமணி சார்பில் நடத்தப்பட்ட தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கோடை வெயிலில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு  குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் வழங்கும் வகையில், 'தாகம் தணிப்போம்' நிகழ்ச்சியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் கடந்த 2018 முதல் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள், கையுறைகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத்குமார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரைக் கிளை அலுவலக  மேலாளர் சி. சோமசுந்தரம், விளம்பரப் பிரிவு மேலாளர் சி.மீனாட்சிசுந்தரம், விற்பனைப் பிரிவு மேலாளர் பி.நாகமுத்துப்பாண்டியன் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT