தமிழ்நாடு

பிற்படுத்தப்பட்ட மாணவா் விடுதிகளில் சேரஜூன் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர ஜூன் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.

DIN

சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர ஜூன் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினத்தை சோ்ந்த மாணவா்களுக்கு 11 விடுதிகளும், மாணவிகளுக்கு 6 விடுதிகளுமாக மொத்தம் 17 கல்லூரியுடன் இணைந்த விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த விடுதிகளில் சேரலாம். விண்ணப்பதாரா்கள் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கும் மேலும் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

இங்கு உணவு, தங்கும் வசதி அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் தங்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளரிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்று, பூா்த்தி செய்து ஜூன் 15-ஆம் தேதிக்குள் மீண்டும் சமா்ப்பிக்கலாம். சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை விண்ணப்பங்களுடன் இணைக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது ஒப்படைத்தால் போதுமானது.

இதுமட்டுமின்றி ஒவ்வொரு விடுதியிலும் இலங்கைத்தமிழா்களின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT