முகப்பு
தமிழ்நாடு

சென்னை, புறநகர் பகுதிகளில் காற்றுடன் லேசானமழை!

சென்னை மற்றம் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: சென்னை மற்றம் புறநகர் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், பெரம்பூர், திரு.வி.க.நகர், வியாசர்பாடி, புளயந்தோப்பு, ஓட்டேரி, மூலக்கடை, மாதவரம், அம்பத்தூர், உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →