தமிழ்நாடு

காரமடை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்

மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வுக் கோரி இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்  நடத்தி வருகின்றனர்.

DIN

மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வுக் கோரி இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்  நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு புதியதாக ஒப்பந்தம் எடுத்துள்ளவர் ரூ.606 இருந்த  ஊதியத்தை பிடித்தம் போக ரூ.400 ரூபாயாக குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை ஏற்றுகொள்ள மறுத்த நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஏற்கனவே வழங்கபட்ட ரூ. 606 ரூபாய் தினக்கூலி ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நேற்று முதல் காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒப்பந்ததாரர் வழங்கும் ரூ.400 ஊதியத்தை ரூ.606 ரூபாயாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க கவுன்சிலர் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT