தமிழ்நாடு

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்திற்கு அபராதம்: உரிமையாளர் புகார்!

DIN

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்திற்கு அபராதம் விதித்த சம்பவம் தொடர்பாக இருசக்கர வாகன உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வேலூர் சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் இருசக்கர வாகனம் கடந்த நான்கு நாள்களாக வேலூரில் உள்ள அவர் வீட்டிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு திடீரென அவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த செய்தியை பார்த்த போது, சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள போக்குவரத்து காவல் துறையினர் அனுப்பியதாக உள்ளது. 

சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள சாலையில் உள்ள சிக்னலில் நிறுத்திய போது, வெள்ளை கோட்டை தாண்டி நிறுத்தியதாக உங்கள் வாகனத்திற்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டதாக குறுஞ்செய்திyஇல் தெரிவித்திருந்தனர்.  

அதைப் பார்த்த சுரேஷ்குமார் நான் சென்னை பக்கமே போனதில்லை. வேலூரில் உள்ள எங்கள் வீட்டில் கடந்த நான்கு நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்ட எனது வாகனத்திற்கு சென்னை பாண்டி பஜார் போக்குவரத்து துறையினர் ரூ.500 அபராதம் குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறி வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இவ்வாறு அடிக்கடி குறுஞ்செய்தி மாறி வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமுளி மலைச்சாலையில் பிரேக் பிடிக்காமல் சென்ற பேருந்து

கோட்டையூா் பாரி நகரில் சித்திரை திருவிழா

அய்யனாா் கோயிலில் சித்திரைத் திருவிழா

விளத்தூா் கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT