முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:09 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்ததால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →