முகப்பு
தமிழ்நாடு

கோவை துடியலூர் அருகே பெண் யானை உயிரிழப்பு

கோவையில் துடியலூர் அருகே காப்புக் காட்டில் பெண் யானை உயிரிழந்தது.

Updated On : 19 ஜூன், 2023 at 1:24 PM
கோவை துடியலூர் அருகே உயிரிழந்த பெண் யானை
பகிர்:

கோவையில் துடியலூர் அருகே காப்புக் காட்டில் பெண் யானை உயிரிழந்தது.

கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, ஆனைகட்டி மத்திய சுற்றுக்குட்பட்ட தூமனூர் பகுதியில் ஆனைகட்டி தெற்கு காப்பு காட்டிற்கு வெளியே 300 மீட்டர் தொலைவில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெண் காட்டு யானை ஒன்று இறந்து கிடைந்தது. 

களப்பணியாளர்கள் ரோந்து பணியின்போது இதனை கண்டறிந்து வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

Advertisement

இதையடுத்து இன்று (திங்கள்கிழமை) கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில் வனக் கால்நடை மருத்துவ அலுவலர்களால் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விரைவில் விசாரணை செய்ப்படும் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.