தமிழ்நாடு

பாஜகவின் 9 ஆண்டுக்கால சாதனையை விளக்கும் புகைப்பட கண்காட்சி!

சேலம் கருங்கல்பட்டி பகுதியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பில் பாரதப் பிரதமரின் 9 ஆண்டுக்கால ஆட்சி சாதனையை விளக்கப் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரத ஜனதா கட்சி 9 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல இடங்களில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  

அதன் ஒரு பகுதியாக சேலம், கருங்கல்பட்டி பகுதியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பில் பாரதப் பிரதமரின் 9 ஆண்டுக்கால ஆட்சி சாதனையை விளக்கப் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். 

இந்த கண்காட்சியில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த பதாகைகள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தது குறிப்பாக பாரதப் பிரதமரின் தேசிய ஊட்டச்சத்து திட்டம் தொழில் முனைவோர் முதலீட்டு நிதி திட்டம் ஏழைகளுக்கு அன்னதானத் திட்டம் கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது/ 

மேலும், பொதுமக்கள் இந்த திட்டங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற விளக்கமும் இடம்பெற்று இருந்தது. இந்த கண்காட்சியை அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பார்த்து தங்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தமிழகத்தில் செய்யும் திமுக: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மேலமடை பாலத்துக்கு பாண்டிய மன்னன் பெயா் சூட்டக் கோரிய வழக்கு தள்ளுபடி!

‘நேரு குறித்து பொய் தகவல்’: ராஜ்நாத் சிங் மன்னிப்புக் கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

நாகா்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்

குடியிருப்புகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க புதிய குளங்கள்: திட்டங்களை ஆய்வு செய்கிறது மாநகராட்சி

SCROLL FOR NEXT