முகப்பு
தமிழ்நாடு

பருவமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக உள்ளோம்: அமைச்சர் ராமச்சந்திரன்

பருவமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:09 PM
பகிர்:

பருவமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர்...

மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாகவும் முதல்வர் தற்போதைய  நிலவரங்களை கேட்டு வருவதாக கூறினார். மழையின் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

சென்னையில் உள்ள 22 சுரங்க பாதையில் கணேசபுரம் சுரங்கபாதையில் மட்டும் தண்ணீர் உள்ளது என்றும் அதை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது வரை எந்தவிதமான  மனித உயிரிழப்போ கால்நடைகள் உயிரிழப்போ ஏற்படவில்லை எனக் கூறிய அவர் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். 

83 இடங்களில்  மழை நீர் தேங்கிய நிலையில் 28 இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டதாகவும், 6 மரங்களும் 38 கிளைகளும் விழுந்துள்ள நிலையில் அவற்றை அகற்றும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறினார். எதிர் வரும்
பருவ மழைக்கும் தயார் நிலையில் உள்ளதாக கூறிய அவர் அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மழை நீர் வடிகால்வாய் பணி 80% முடிந்ததன் காரணமாக தான் மழை நீர் பெருமளவு தேங்கவில்லை என்றும் மெட்ரோ பணி நடைப்பெறும் இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது அவற்றையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். 260 பம்புகள் தயார்நிலையில் உள்ள நிலையில் 25 பம்புகள் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →