கடலூர்: கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் திங்கள்கிழமை நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
கடலூரிலிருந்து திருவண்ணாமலை சென்ற பேருந்தும் பண்ருட்டியிலிருந்து புதுச்சேரி சென்ற பேருந்தும் இன்று நேருக்குநேர் மோதியதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 96-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான நிலையில், மருத்துவமனையில் நேற்று ஒருவர் பலியானார். இந்நிலையில், சிகிச்சை பலனின்று இன்று மேலும் ஒருவர் பலியான நிலையில் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
பண்ருட்டியிலிருந்து புதுச்சேரி சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது நேருக்குநேர் மோதியததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.