முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை: அமலாக்கத்துறை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:10 PM
கோப்புப்படம்
பகிர்:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் செந்தில் பாலாஜி, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

இந்நிலையில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கக்கோரிய மனு, அவரது இடைக்கால ஜாமீன் மனு  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

தற்போது அமலாக்கத்துறை காவலில் செந்தில் பாலாஜி உள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை காவலில் எடுக்க விசாரிக்க முடியவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

செந்தில் பாலாஜி மனைவியின் ஆள்கொணர்வு மனுவுக்கு எதிராக அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →