அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை குறித்த முன்னறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அடுத்த 3 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி வரை) நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம். நீலகிரி, ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: வேங்கைவயல் விவகாரம்: சிபிஐ விசாரணை தேவையில்லை!
வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.