பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதச்சார்ப்பற்ற கட்சிகளின் ஒற்றுமையே தமிழ்நாட்டில் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே அனைத்துக் கட்சிகளும் ஒற்றை இலக்காக கொண்டுள்ளனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அரசியல் கட்சிகள் இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டேன்.
ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு அமைத்திட வேண்டும். செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காமல் எந்த நோக்கத்தோடும் நான் வெளியேறவில்லை. நன்றி கூறும் வரை கூட்டத்தில் இருந்தேன். விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதால் வெளியே வந்தேன். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதாக கூறப்பட்டிருந்தது. பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யவில்லை. தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டம் என்று யாரும் நினைக்க வேண்டாம்.
2023ஆம் ஆண்டு ஜூனில் சந்தித்தோம், 2024ல் மே மாதத்தில் வெற்றி பெற்றோம் என்று இருக்கும். மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்கு உள்ளதோ அதன் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும். தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்து கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்காது. கூட்டணி அமைக்காவிட்டால் தொகுதி பங்கீடு செய்து கொள்ளலாம் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தினேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.