எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது!
தமிழில் 'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடுஎழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது!
தமிழில் 'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் ராம் தங்கம் சிறுவயதில் இருந்தே தொடங்கிய வாசிப்பின் ஆர்வமாக எழுதத் தொடங்கினார். தினகரன், ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவரது முதல் புத்தகமான ‘காந்திராமன்’ வெளிவந்தது. தொடர்ந்து ‘ஊர்சுற்றிப் பறவை’, 'மீனவ வீரனுக்கு ஒரு கோவில்’ ஆகிய நூல்களை எழுதினார்.
இதையும் படிக்க | எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது!
2019 ஆம் ஆண்டு வெளியான 'திருக்கார்த்தியல்' எனும் சிறுகதைத் தொகுப்புக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜவனம்(குறு நாவல்), புலிக்குத்தி(சிறுகதைத் தொகுப்பு) ஆகியவை இவரது சமீபத்திய படைப்புகளாகும்.
நேஷனல் புக் ட்ரஸ்ட்டுக்காக ‘சூரியனை எட்ட ஏழு படிகள்’, ‘காட்டிலே ஆனந்தம்’, ‘ஒரு சுண்டெலியின் கதை ஆகிய சிறுவர் கதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார்.
மேலும் தனது பயண அனுபவங்களை ‘கடவுளின் தேசத்தில்' என்றும் குமரி மாவட்டம் சார்ந்த வரலாற்றுக் கட்டுரைகளை ‘சிதறால்’ என்ற பெயரிலும் அமேசான் கிண்டிலில் மின்நூலாக வெளியிட்டுள்ளார்.