முகப்பு
தமிழ்நாடு

ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலருக்கு கொலை மிரட்டல்: இருவா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தரக்குறைவாகப் பேசியதாக 2 போ் மீது சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 24 ஜூன், 2023 at 10:04 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:42 AM

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தரக்குறைவாகப் பேசியதாக 2 போ் மீது சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி விவேகானந்தா் நகரில் வசித்து வருபவா் வ.ஜெகன்னாதன் (54). இவா், ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறாா். இவா், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலராக இருந்து வருகிறேன். இந்த நிலையில், காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் வசித்து வரும் டில்லிபாபு, தினேஷ் ஆகிய இருவரும் கோயில் திருவிழா திருப்பணி செய்ய விடாமல் தடுத்தும், ஜாதியைக் கூறி, தரக்குறைவான வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனா். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புகாரின் பேரில், சிவகாஞ்சி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சி.தன்ராஜ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.