பெருங்களத்தூர் மேம்பாலம் நாளை மறுநாள் திறப்பு: நெடுஞ்சாலைத்துறை
பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலம் நாளை மறுநாள் திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலம் நாளை மறுநாள் திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மேம்பாலம் கடந்த 2019ம் ஆண்டு ரூ.234 கோடி செலவில் நான்கு வழிதடத்தில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த சூழலில் பெருங்களத்தூரிலிருந்து சீனிவாச நகர் செல்லக்கூடிய மேம்பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டது.
கடந்த 45 நாட்களாக திறக்கப்படாமல் இருந்த மேம்பாலத்தை உடனடியாக திறக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். பெருங்களத்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் ரயில்வே மேம்பாலம் திறக்கப்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.