தமிழ்நாடு

நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூபதி வீடு உள்பட மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

நாமக்கல்: நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூபதி வீடு உள்பட மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரத்தை சேர்ந்தவர் பூபதி(40). இவர் தற்போது நாமக்கல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன் நாமக்கல்லில் பணியாற்றிய போது புகையிலை பொருள்கள் கடத்தல் கும்பலுக்கு துணை போவதாகவும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தப்பிச் சென்ற கும்பலிடம் லஞ்சம் பெற்று விடுவித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து எருமப்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். சில மாதங்களுக்கு முன் மீண்டும் நாமக்கல் காவல் நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கும் புகார் சென்றது.

இந்த நிலையில் புதன்கிழமை காலை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுபாஷினி தலைமையிலான போலீஸார் நாமக்கல் திருநகரில் உள்ள பூபதியின் வீடு, மல்ல சமுத்திரத்தில் உள்ள அவரது தந்தை மற்றும் மாமனார் வீடுகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனை சம்பவம் நாமக்கல் காவல்துறை அதிகாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT