திருநெல்வேலி டவுனில் பந்தய குதிரையை மர்ம நபர்கள் நள்ளிரவில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கினர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வகையில் குதிரை பரிதாபமாக உயிரிழந்தது.
திருநெல்வேலி டவுன் பழனி தெருவை சேர்ந்தவர் தனுஷ். இவர் குதிரை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். அந்த வகையில் திருநெல்வேலி பேட்டை பகுதியிலிருந்து சுமார் 45 ஆயிரம் ரூபாய்க்கு ஆண் குதிரை ஒன்றை வாங்கி இருக்கிறார். அதற்கு 20 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக முதலில் செலுத்தியுள்ள நிலையில், மேலும் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளது.
நேற்று ஆசையாக வாங்கிய குதிரையை தனது தொழுவத்தில் கட்டி உள்ள நிலையில், நள்ளிரவு 12 மணி வரை தனுஷ் மற்றும் நண்பர்கள் குதிரையுடன் இருந்திருக்கிறார்கள். அதிகாலையில் மீண்டும் குதிரையை வந்து பார்த்தபோது குதிரை கொடூரமான ஆயுதங்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு நிலைகுலைந்து கிடந்த குதிரையை கண்டு அதிர்ச்சி அடைந்த தனுஷ், செய்வது அறியாது வேதனை அடைந்துள்ளார்.
தொடர்ந்து நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் வந்த நிலையில் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக முதல் கட்டமாக திருநெல்வேலி டவுன் பகுதியில் ரோந்து பணியில் இருந்து திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி கால்நடை அரசு மருத்துவக் கல்லூரி நடமாடும் சிகிச்சை அளிக்கும் வாகனம் மூலமாக வந்த கால்நடைத்துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மேல் சிகிச்சை அளிப்பதற்காக குதிரையை வாகனத்தில் ஏற்றி தீவிர சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் கல்லூரி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குதிரை உயிரிழந்தது. குதிரை பந்தயம் போட்டி காரணமாக இது போன்ற கொடூரமான செயல் நடைபெற்றதா? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எதுவாகினும் வாயில்லா ஜீவன்களை இதுபோன்று ஈவிறக்கம் இன்றி தாக்கிய கொடூரர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.