தமிழ்நாடு

ராமேசுவரம் கோவில் பாரம்பரிய உரிமை: திமுக கூட்டணி உண்ணாவிரதம்!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பாரம்பரிய உரிமையை பாதுகாக்க கோரி திமுக கூட்டணி கட்சி சார்பில் கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பாரம்பரிய உரிமையை பாதுகாக்கக் கோரி திமுக கூட்டணி கட்சி சார்பில் கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பாரம்பரிய உரிமையை மீட்டக் கோரி திமுக கூட்டணிக் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக, சி.பி.ஐ., சி.பி.எம்., மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிதப் போராட்டம் தொடங்கியுள்ளது.

ராமநாதசுவாமி கோவிலில் வெளிமாநில பக்தர்கள் கொண்டு வரும் கங்கை தீர்த்தத்தை பூஜை செய்யும் இடத்தையும் மாற்றியதை கண்டித்தும் மீண்டும் அதே இடத்தில் தொடங்க வேண்டும்.

உள்ளூர் பொதுமக்கள் கோவில் வரக்கூடிய யாத்திரைகளை சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்படிக லிங்க தரிசன கட்டணம் ரூபாய் 200 ஆக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும்.

மாற்று திறனாளிகள் முதியோர்களுக்கு தரிசனம் செய்ய தனி வழி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தங்கும் விடுதி, குடிநீர் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நீண்ட காலமாக சுவாமி பள்ளக்கு தூக்கும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுப்பதோடு அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த உண்ணாவிதப் போராட்டம் மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்து உண்ணப் போட்டத்தை தொடங்கி வைத்தார்.

சிபிஎம் தாலுகா செயலாளர் G.சிவா. சி.பி.சி.பி.ஐ. தாலுகா செயலாளர் ரவிச்சந்திரன். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ராஜீவ் காந்தி, மனிதநேய மக்கள் கட்சி நகர் செயலாளர் சையது இப்ராகிம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட நிர்வாக குழு முருகானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெரோன் குமார், மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், மதிமுக நகர் செயலாளர் வெள்ளைச்சாமி, உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT