முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மார்ச் 5-ல் மகாருத்ர மகாபிஷேகம்!

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம்..

Updated On : 3 மார்ச், 2023 at 4:38 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:09 PM

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் மார்ச் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் மகாருத்ர யாகம் மற்றும் வைபவம் நடைபெறுகிறது.

ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு  வழக்கமாகும். ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நாளை மார்ச்.5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது. மகாபிஷேகத்தை முன்னிட்டு காலை மகாருத்ரயாகம் மற்றும் வைபவம் நடைபெறுகிறது.

Advertisement

மகா ருத்ர ஹோமம் மற்றும் யாகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முக்குறுணி விநாயகர் கோயிலில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. மார்ச்.4-ம் தேதி சனிக்கிழமை காலை நவக்கிரக சன்னதியில் நவக்கிரக ஹோமம், ஆச்சாரிய வர்ணம், மதுபர்க்கம், தனபூஜை நடைபெறுகிறது. மார்ச்.5-ம் தகேதி காலை சித்சபையில் லட்சார்ச்சனையும், நடனப்பந்தலில் யாகசாலை கடம் ஸ்தாபனம் செய்யப்படுகிறது. 

பின்னர் மகா ருத்ர ஜபம், மகா ருத்ர ஹோமம் மகா பூர்ணாஹூதி, வடுக பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜை நடைபெறுகிறது. பின்னர் யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா ருத்ர மகாபிஷேகம் நடைபெறுகிறது. மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேத தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.