தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

DIN



சென்னை: தமிழ்நாட்டில் சளி, இருமலுடன் வேகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 1000 இடங்கலில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

நாடு முழுவதும்  ‘எச்.3என்-2’ வைரஸ் காய்ச்சல் பரவி வேகமாக பரவுகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும் சளி, இருமலுடன் வேகமாக  வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. 

இந்நிலையில், சளி, இருமலுடன் வேகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 1000 இடங்கலில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும்.

காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம். 

பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டத்தை தவிர்த்தல், மூக்கு மற்றும் கண்களை தொடாமல் இருத்தல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.34,000 கோடி வங்கிக் கடன் மோசடி: டிஹெச்எஃப்எல் முன்னாள் இயக்குநா் மீண்டும் கைது

வருமான வரித் துறை கட்டடத்தில் தீ விபத்து:ஒருவா் உயிரிழப்பு; 7 போ் மீட்பு

பிஓஐ நிகர லாபம் ரூ.1,439 கோடியாக உயா்வு

தோ்தல் நிதிப் பத்திர முறைகேடு புகாா் மனு: விரைந்து விசாரிக்க முறையீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT