தமிழ்நாடு

பார்சல் சர்வீஸ் கடையில் சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து: சகோதரர்கள் படுகாயம்

சின்னமனூர் பேருந்து நிலைய வளாக கடையில் இயங்கி வந்த பார்சல் சர்வீஸ் சென்டரில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சகோதரர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.

DIN

உத்தமபாளையம்: சின்னமனூர் பேருந்து நிலைய வளாக கடையில் இயங்கி வந்த பார்சல் சர்வீஸ் சென்டரில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சகோதரர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.

சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சியில் உள்ள வெண்ணியர்  மலை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் சின்னமனூர்  பேருந்து நிலைய வணிக வளாக   கடையில்  பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் வெண்ணியர் எஸ்டேட்டை சேர்ந்த  சஞ்சய் காந்தி மகன்கள் அபினேஷ், அஸ்வின் ஆகியோர் இருவரும் திங்கள் கிழமை இரவு பார்சல் சர்வீஸ் கடையில் தூங்கி உள்ளனர். 

அப்போது செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கடையில் திடீரென பயங்கர வெடி சத்தத்துடன்  கடை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது . இதில் சகோதரர் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் கடையை விட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். 

அதன்பின் தகவலின் பேரில் சின்னமனூர் தீயணைப்புத் துறைவினர் தீயை கட்டுப்படுத்தினர். இது குறித்து  போடி காவல் துணை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் 
முதல் கட்ட விசாரணையில் கடையில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT