முகப்பு
தமிழ்நாடு

ஹோலி பண்டிகை: ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (மார்ச் 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
ஜிப்மர் மருத்துவமனை (கோப்புப் படம்)
பகிர்:

ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (மார்ச் 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த  மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனர்.

நாளை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது என்றும், புதுச்சேரி ஜிப்மரில் அவசர சிகிச்சைப் பிரிவு வழக்கம்போல் இயங்கும் என்றும் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.