அதிமுகவில் இணைந்த பாஜக பெண் நிர்வாகிகள்!
பாஜகவில் இருந்த இரண்டு பெண் நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
பாஜகவில் இருந்த இரண்டு பெண் நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு - மாநிலச் செயலாளர் லதா மற்றும் தாம்பரம் ஒன்றியச் செயலாளர் வைதேகி ஆகிய இருவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
முன்னதாக பாஜக ஐடி விங் பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
இதையும் படிக்க | பாஜக ஐடி பிரிவிலிருந்து 13 நிர்வாகிகள் விலகல்!
அதுபோல பாஜகவிலிருந்து 13 நிர்வாகிகள் இன்று அக்கட்சியில் இருந்து விளங்கியுள்ளதும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.