முகப்பு
தமிழ்நாடு

கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,717 கோடி திரட்டிய எஸ்பிஐ

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.3,717 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.3,717 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கூடுதல் அடுக்கு 1 (ஏடி1) கடன் பத்திரங்களை வெளியிட்டு, வங்கி ரூ.3,717 கோடி நிதி திரட்டியுள்ளது.

இது, பேசில்-3 விதிகளை நிறைவு செய்யும் மூன்றாவது ஏடி1 கடன் பத்திர வெளியீடு ஆகும். இந்த கடன் பத்திரங்களுக்கு 8.25 சதவிகித கூப்பன் விகிதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் ஏடி1 கடன் பத்திர வழியிலான மூலதன தளத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த வெளியீடு மேற்கொள்ளப்பட்டது.

வெளியீட்டு மதிப்பான ரூ.2,000 கோடியைவிட 2.27 மடங்கு அதிகமாக, 53 முதலீட்டாளா்கள் ரூ.4,537 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பத்தனா். அதில் ரூ.3,717 கோடி மதிப்பிலான விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →