தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: அமைச்சர் கணேசன்

வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.

DIN


வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்நிலையில், தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரிய கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் வெ. கணேசன், தமிழ்நாட்டில் சட்டவிரேதமாக விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் சிகரெட் லைட்டர்கள் மீது பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைத்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தீப்பெட்டி உற்பத்தி தொழில் பாதிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெ. கணேசன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT