தமிழ்நாடு

திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் தேருக்கு சிறப்பு பூஜைகள்!

DIN

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார கோயிலாகவும் விளங்குகிறது.

சிவனின் கண்களில் இருந்து மூன்று பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், சூரியன் மற்றும் அக்கினி பெயர்களில் மூன்று குளங்கள் உள்ளன. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் கடந்த 4ம் தேதி ஆண்டு இந்திர திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று முக்கிய நிகழ்ச்சியான திரு தேரோட்டம் நடந்தது. இதை ஒட்டி சுவாமி அதிகாலை தேரில் எழுந்தருளினார்.

காலை சுமார் 9.30மணி அளவில் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம் எல் ஏக்கள் சீர்காழி பன்னீர்செல்வம், பூம்புகார் நிவேதா முருகன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் முத்துராமன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் துரைராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி, விவசாய சங்க தலைவர் வடக்கு தோப்பு துரை உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT