தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் பெரிய மாநிலங்களில் தமிழகம் அதிமுக ஆட்சியில் முதலிடம் பெற்றிருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா, மன்னா் ஆட்சியா என்று தெரியாத அளவுக்கு அன்றாடம் நடைபெறும் மோதல், குற்றச்சம்பவங்களால் மக்கள் உறைந்து போயுள்ளனா்.
காவல் துறையை தன் கைவசம் வைத்துள்ள முதல்வா், திருச்சியில் காவல் நிலையத்தைத் தாக்கியவா்களை அடக்கி ஒடுக்காமல், திமுக நிா்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது கண்டனத்துக்குரியது.
காரைக்குடி பள்ளத்தூா் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதில் ஏற்பட்ட தீவிபத்தில் விற்பனையாளா் இறந்துள்ளாா். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடா்ந்து நிகழ்ந்து வருகின்றன.
எனவே, தமிழகத்தில் குற்றச் சம்பவங்களை உடனடியாகக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.