கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பு?

அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட அண்ணாமலை எதிர்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.  அதிமுக கூட்டணி

DIN


சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட அண்ணாமலை எதிர்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண்டபத்தில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,  
தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். 

அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக கட்சி பணி செய்வேன்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்கு நேரம் கேட்டுள்ளேன். 

கர்நாடக பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் மே 10 ஆம் தேதி வரை கட்சி பணிகளில் தீவிரமாக இருப்பேன்.

அண்ணாமலையின் பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதாகவும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், பாஜக உள்கட்சி விவகாரம் வெளியே கூறமுடியாது, நடக்காத ஒன்றை சித்தரித்துள்ளனர் என்று நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT